Friday, 1 April 2011

திராவிடத்தை கொச்சைப்படுத்தும் தறுதலைகள் தமிழ்நாட்டுக்கும் தமிழீழத்துக்கும் செய்தது என்ன...?

திராவிடம் என்ற வார்த்தை பார்ப்பனர்களை எப்படி நடுங்க வைக்கிறதோ அதே போல் தமிழ் தேசியத்தை வாயில் பேசும் சாதி வெறிபிடித்த ஆரியத்தமிழர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியே வருகின்றன.

திராவிடம் என்ற சொல் யாருக்கு அச்சத்தை உண்டு செய்கிறதோ அவர்களே தமிழின துரோகிகள் என்பதை நாம் எளிதாக அடையாளம் காணலாம்.
தமிழீழத்தை தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தது போல் ஆரியத்தமிழர்கள் சிலர் முகப்புப்புத்தகத்தில் எழுதி வருகின்றனர்.

குளு குளு அறையில் சுழலும் நாற்காலியில் குந்திக்கொண்டு facebook, orkut, yahoo, gmail, community groups என்று பலவற்றில் இணைந்துகொண்டு தாங்களே ஈழத்துக்கு போராடுபவர்கள் என்று இணையத்தில் சிலர் புரட்டுகட்டிவருகின்றனர்.

இவர்களின் சொந்த தகவல்களை நாம் திரட்டிவருகின்றோம், இத்தகைய புல்லுறுவிகளை விரைவில் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறோம் இங்கே.
புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களுக்கு இணையத்தின் மூலமே செய்திகள் சென்றடைகிறது.

ஆரியப்பார்ப்பனர்கள் அக்காலத்தில் எப்படி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தவறான செய்திகளை மக்களிடம் பரப்பி வந்தார்களோ அவர்களின் வழியில் ஆரியத்தமிழர்களால் இணையங்கள் மாறிவருகின்றன.
பொய்யான செய்திகளை தங்கள் இணையத்தின் வாயிலாக வெளியிட்டு புலம்பெயர்தமிழர்களிடம் பணம் பறிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

இதற்குரிய சில ஆதாரங்களை திரட்டிவைத்துள்ளோம். விரைவில் பெரியாரின் கைத்தடி விளாசலில் உண்மைகள் வெளிவரும்...

தம்பி பிரபாகரனின் தமிழக முகவரியை கொச்சைப்படுத்தும் ஆரிய அடிவருடிகள்

பெரியாரையும், திராவிடத்தையும் கொச்சைப்படுத்துவது மட்டுமே தமிழ் தேசியம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் எழுச்சிக்கு பக்கபலமாக தமிழகத்தில் நின்றது திராவிடர்கள் தான் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சாதி மதவெறி அற்ற அனைத்து தமிழர்களுக்கும் தெரியும்.

இப்பொழுது புதிதாக உதித்துள்ள சிலர் பெரியாரின் திராவிடத்தை பேசுபவர்களால் தான் ஈழம் அழிந்தது என்றும் தமிழினம் முன்னேறாமல் இருக்கிறது என்றும் தவறான தகவல்களை தற்போதையை இளையதலைமுறை ஈழத்தமிழர்களிடமும் தமிழகம் தமிழர்களிடமும் பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வேண்டி வந்தப்பொழுது தமிழ் தேசியம் பேசும் பயந்தாங்கொள்ளிகள் பின்வாங்கினர். *( தாங்கள் வாய்ச்சவடால் பேர்வழிகள் என்பதை நிரூபித்தனர்.)

முதன் முதலில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்தது கோவை மாவட்டத்திலுள்ள திராவிடரான கு.இராமகிருட்டிணன் அவர்களே,. அதன் பின்னால் 3 ஆம் பேட்சிலிருந்து இப்போது பெரியார் திராவிடர் கழகத்தலைவர் ஆக இருக்கும் கொளத்தூர் மணி அவர்களே.

தம்பி பிரபாகரனின் தமிழக முகவரியனது தந்தைப்பெரியார் கல்லறை இருக்கும்  திராவிடர் கழகத்தின் "பெரியார் திடலே" ஆகும். இந்திய அரசிடம் பதியப்பட்ட தகவலே இதுவாகும்.

ஈழமக்களிடம் பணம் பறித்து குடித்துக்கூத்தடித்து மேடையில் உளறும் நபர்களுக்கு இத்தகைய உண்மைகள் தெரியாது.


இராசீவ் படுகொலை நடந்ததும் முதன் முதலி கைது செய்யப்பட்டது பெரியார் திடலில் இருந்தே.

அவ் வழக்கில் கூட்டம் கூட்டமாக சிறை சென்றதும் அந்நாளில் திராவிடர் கழகத்தில் இருந்தவர்களே.

சிறையிலிருக்கும் தோழர் பேரறிவாளன் அவர்களும் திராவிடர் கழகத்தின் மாணவரணிப்பொறுப்பாளரே.

இவர்கள் கைது செய்யப்பட்டப்பொழுது இப்பொழுது ஈழ ஆதரவு பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் எந்த திரையரங்க கொட்டகையில் வாய்ப்பிழந்து திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார்களோ...

இதே போல் இன்னும் பல வெளிவராத உண்மைகள் உள்ளன...

முகப்புப்புத்தகத்தின் வாயிலாக திராவிடத்தைக்கொச்சைப்படுத்திக்கொண்டிருப்பவர்களை பெரியாரின் கைத்தடி மூலம் திருத்தும் வகையில் இம் முகப்புப்புத்தகத்தில் நுழைந்துள்ளேன்.

பெரியார் திராவிடர் கழகம் ஆ.ராசாவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளதாக அமெரிக்காவிலிருக்கும் ஆரியத்தமிழரான ஒருவர் முகப்புப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆ.ராசா கல்லூரி காலம் முதல் பெரியாரிய தொண்டர்கள் அனைவருக்கும் பழக்கமானவர்தான். அரசியல் சாக்கடையில் நுழைந்தாலும் பெரியாரின் கருத்துக்களை உடையவர்களை மதிக்கும் பழக்கமுடையவர்.

முதன் முதலாக ஈழத்தமிழர்களை காக்கக்கோரி  தங்கள் கைகாசினை செலவழித்து  2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் புதுடெல்லிக்கு சென்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர் பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள்.

ஈழத்தமிழர்களை காக்க அப்பொழுது டெல்லியிலுள்ள மத்திய அமைச்சர்களை சந்திக்க அனைத்து ஏற்பாட்டினை செய்தவர் "ஆ.ராசா" என்ற முறையில் டெல்லி சென்ற அனைத்து பெரியாரிய தொண்டர்களுக்கும் ஆ.ராசா அறிமுகமானார்.

அந்நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளரோ தம்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும், தூக்கிலிட வேண்டும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார்.

அதிமுகவினர்  கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் காங்கிரஸை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு " தம்பி சூரியாவுக்காக மகிந்தவுடன் விருந்து உண்டு வந்த விவேக் ஓபராயை குடி போதையில் மன்னித்த " கூட்டத்தினரை என்ன சொல்ல.

பாமர மக்களிடம் செய்தி கூறி கையேந்தி நன்கொடை வாங்கி மீதத்தொகையினை தங்கள் சம்பாத்தியத்தில் போட்டு தமிழ் துரோகிகளிடமும் விரோதிகளிடமும் சமரசமில்லாமல் போராடிவரும் பெரியாரின் தொண்டர்களை கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளை படிப்படியாக வெளிப்படுத்துவோம் ஆதாரத்துடன்....

புலம்பெயர் தமிழர்களே ஈழத்திலிருக்கும் கைகால், உடல் உறுப்புகள் இழந்து வறுமையில் வாடும் சொந்தங்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.

மேடைப்பேச்சாளர்களை நம்புவதை கைவிடுங்கள், ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுங்கள்...

"  நீ உன் உழைப்பில் வந்த உணவை உண்டுவிட்டு மக்களுக்கு உதவு" - "பொதுமக்களுக்காக உதவுகிறேன் என்ற பெயரில் நீ உன் வயிரை வளர்த்தால் நீயும் மக்கள் விரோதியே" என்றார் எங்கள் தந்தை அன்றே இவர்களை பற்றி...

-- பெரியாரின் கைத்தடி விளாசல் தொடரும்...